இந்துமத அலுவல்கள் அமைச்சர் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்.

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று(26) சனிக்கிழமை வருகைதந்ததுடள் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

இதன்போது ஆலய நிருவாகசபையினருடன், பூசை வழிபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இவ்விஜயத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் கலந்து கொண்டார்.