முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும்

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், குறைந்த ஊதியத்தில், அர்பணிப்பாக சேவையை வழங்கிவரும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டார்.

விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் கூட்டத்தொடர்பில் இது தொடர்பிலான பிரேரணையை முன்வைக்க உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் நிலை தொடர்பில் இன்று(26) சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலே இதனைக் கூறினார்.

மேலும் இது தொடர்பில் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையில் கஸ்ரப்பிரதேசங்களில் எமது சமூகம் கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு குறிப்பிட்ட வீதம் எழுத்தறிவு இல்லாமல் எமது சிறார்கள் இருந்து வந்தனர்.

யுத்தம் காரணமாகவும், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவும் கஸ்ரப் பிரதேசங்களில் உள்ள சில மாகாணப் பாடசாலைகள், நிறுவனம் சமூகஅமைப்புக்கள் நடத்தி வந்த பாலர் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் ஏற்பட்டன.

இதனால் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலையில் அந்தந்தப் பகுதிகளில் இருந்த புஊநுஃ(ழுஃடு) புஊநு (யுடு) சித்தி அடைந்த இளைஞர்,யுவதிகள் சிறார்களுக்கும், மாணவர்களுக்கும் ஒழுக்கத்தையும், எழுத்தறிவையும்,கல்வி அறிவையும் புகட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதன் காரணமாக பாடசாலைகளிலும், பாலர் பாடசாலைகளிலும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமை புரிய வேண்டிய நிர்ப்பந்தம் இளைஞர்,யுவதிகளுக்கு ஏற்பட்டன.

இந் நிலையில் இவர்களுக்கான டிப்ளோமா பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ் தங்களை பதிவு செய்து முன்பள்ளி ஆசிரியர்களாக சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப்பணியகத்தால் மாதாந்தம் ரூபா3000ஃஸ்ரீ கொடுப்பனவாக வழங்கி வருவது பாராட்டத்தக்கதாகும்.

இவர்கள் அனைவரும் 15-25வருடங்களாக அதிக~;டப் பிரதேசங்களில் கடமையாற்றி வருவதோடு, இவர்கள் ஒவ்வொருவரும் திருமணமானவர்களாகவும்., 4-5 பிள்ளைகளை உடையவர்களாகவும் இருந்து வருகின்றனர். இதனால் மிகவும் பொருளாதார கஸ்ரத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சில முன்பள்ளி பாடசாலைகள் தொண்டு நிறுவனங்களால் நடாத்தப்பட்ட போது அதிகரித்த ஊதிபத்தை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கி வந்தனர். இவைகளில் பல நிறுவனங்கள் கொடுப்பனவை நிறுத்த்pயுள்ளது. இதனால் தற்பேர்து குறைந்த ஊதிபத்தை பேறும்போது மிகுந்த பொருளாதார இடர்களை சந்திக்கின்றார்கள்.

எனவே கஸ்டமான நிலையில் கடினமான காலத்தில் ஏழ்மையிலும்,அர்பணிப்போடும் பணிபுரியும் இம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இவர்கள் எதிர் நோக்கும் க~;டத்தைப்போக்க இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவான ரூபா3000ஃஸ்ரீ தைரூபா5000ஃஸ்ரீஆக உயர்த்தி
கொடுப்பனவை வழங்குவதோடு, மிக நீண்டகாலமாக பணியாற்றி ஒய்வு நிலைஅடையும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு ஏதோவொரு நிதியத்தை அமைத்து மாதமாதம் இவர்களின் பெயரால் நிதியை வைப்பிலிட்டு இவர்கள் ஒய்வு நிலையை அடையும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை
விசேட கொடுப்பனவாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மேற்கொள்ள வேண்டும் என்றார்.