எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சையில் மாற்றம்.

எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை 4ஆம் திகதி நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று தாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எதிர்வரும் 2 ஆம் திகதி ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.