லக்ஷ்மிநாராயணர் பெருமாள் ஆலய பிரமோற்சவத்தின் தேர் உற்சவம்

(மூதுார்நிருபர்)  திருகோணமலை 6ம் கட்டை  அருள்மிகு லக்ஷ்மிநாராயணர் பெருமாள் ஆலய பிரமோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை 9.00மணியளவில் பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  தேரில் பெருமாள்  வலம் வர பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் இடைக்கிடை கலாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன இங்கு பெருமாள் ஆலயத்திலிருந்து வெளி வருவதனையும் தேரில் வலம்வருவதனையும் பக்தர்கள் வடப்பிடித்திழுப்பதனையும் பல நிகழ்வுகளையும் காண்க.