கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரவேற்குமுகமாக பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு நேற்று நடைபெற்றதுஇ சமய வழிபாடுகளையடுத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதத்தலைவர்கள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சிஇ சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமித் எதிரிசிங்க  கிழக்கு மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து  ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர புதிய கிழக்கு மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.