புதிய புத்தசாசன அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா புதிய புத்தசாசன அமைச்சராகவும், தலதா அத்துகோரல புதிய நீதி அமைச்சராகவும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.