அம்பாறை மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் மட்டக்களப்பு மக்களின் திருவிழா

(படுவான் பாலகன்) அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ம்நாள் திருவிழா மட்டக்களப்பு மாவட்ட மக்களினால் நேற்றிரவு(24) மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஆலய மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் பூசைகள் நடைபெற்று, கொடித்தம்பம் மற்றும் வசந்த மண்டபத்தில் விசேட பூசை ஆராதனைகளும் நடைபெற்றன.
பூசையினைத் தொடர்ந்து, சுவாமி, உள்வீதி, வெளிவீதி உலாவந்து, ஆலயத்திலிருந்து, அம்பாறை நகர்வரை ஊர்வலமாக சுவாமி எடுத்துசெல்லப்பட்டது.
இதன்போது, தீபந்தம் சூழற்றல், இன்னியம், காவடியாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் போன்ற ஆட்டநிகழ்வுகளும் நடைபெற்றன.
இதில் சிங்கள மற்றும் தமிழ்மக்கள் கலந்து கொண்டதுடன், நிறைகுடம் வைத்தும் வழிபாட்டில் சிங்களமக்களும் ஈடுபட்டனர்.