மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர சபைகள் உருவாக்கப்படும் என முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர சபைகள் உருவாக்கப்டும் என முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை உள்ளுராட்சி சட்டமூலத்தின் ஊடாக இதனை மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் களுவாஞ்சிகுடிஇ செங்கலடி ஆகிய பிரதேச சபைகள் நகரசபைகளாக மாற்றப்பட வேண்டுமென நாங்கள் பல தடவைகள் முன்னை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.. ஆனால் அதனை அரசாங்கம் கணக்கிலெடுக்கவில்லை. அப்போதைய நிலமை வேறு தற்போதைய நிலமை வேறு. இந்த நல்லாட்சி அரசாங்கத்திலே இதனை கேட்டு பெறமுடியும். இதற்கான நடவடிக்கைகளை இவ் உள்ளுராட்சி தேர்தலுக்கான சட்டமூலம் கொண்டுவர முன்னர் மேற் கொள்ள வேண்டும்.

நுவரேலியாவிலே மானோகணேசனின் வேண்டுகோளின் பேரில் பல பிரதேச சபைகள் நகர சபைகளாக மாற்றி தருவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். எமது மாவட்டத்தில் களுவாஞ்சிகுடிஇசெங்கலடி பிரதேச சபைகள் நகரசபைகளாக மாற்றுவதற்கான சகல தகுதிகளையும் கொண்டுள்ள நிலையில் இதனை தரமுயர்த்துவதை ஏன் தாமதப்படுத்த வேண்டும். இதனை விரைவுபடுத்தி உளளுராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும்.

எமது மக்களும் இந்த நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கியவர்கள் இதன் பலாபலன்களையும் எமது மக்கள் அனுபவிக்க வேண்டும். இதுவே சிறந்த தருணம் இதனை அனைவரும் ஒன்றிணைந்து மிகவிரைவாக மேற் கொள்ளவேண்டும். என அவர் இதன்போது தெரவித்தார்.