170 ஆவது நாளாக தொடரும் போராட்டம்  நேற்று அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரவு

(சண்முகம் தவசீலன்) தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 170  ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் போராட்டத்துக்கு நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட மக்கள் வருகைதந்து அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர்.