கிராம உத்தியோகத்தர்கள் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

(படுவான் பாலகன்) மண்முனைப்பற்று, மண்முனை தென்மேற்கு ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமாதான நீதிவானாக வியாழக்கிழமை(24) மாலை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற  நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இலங்கையில் காணப்படும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் சமாதான நீதவானாக செயற்பட முடியும் என கடந்த 18.02.2016 அன்று வெளியிடப்பட்ட 1954-34ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமையவே இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
தாம் கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவு அமைந்துள்ள பிரதேச செயலகப்பிரிவினுள் இப்பதவியின் பிரகாரம் மக்களுக்கான கடமைகளை மேற்கொள்ளவே இப்பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.