வைகுந்தம் வடிமோடிக் கூத்து சதங்கை அணி விழா

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் புதிதாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும், வைகுந்தம் வடமோடிக் கூத்தின் சதங்கை அணி விழா வியாழக்கிழமை(24) காலை இடம்பெற்றது.
இறைவழிபாட்டினை தொடர்ந்து, அண்ணாவியார், வைகுந்தம் கூத்தில் பாத்திரமேற்று நடிக்கும் கலைஞர்களின் காலில் சதங்கையை அணிவித்தார். அதனை தொடர்ந்து கூத்து அண்ணாவியாரால் பழக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கூத்துக்கலை சிறப்புபெறுகின்றது. இக்கூத்துக்கலையில் சதங்கை அணிவிழாவும்  முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
1991ம் ஆண்டின் பின் இக்கிராமத்தில் இவ்வாண்டே கூத்து ஆடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.