பக்தர்கள் புடைசூழ கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேறியது.

(படுவான் பாலகன்) வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது, இன்று(24) வியாழக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தினைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம்வந்த நிகழ்வும் நடைபெற்றது.
கொடியேற்ற பூசை நிகழ்வானது சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அடியார்களும் பங்கேற்றிருந்தனர்.
கொடியேற்றத்தினைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று, 10.09.2017ம் திகதி தேரோட்டமும், அன்று இரவு திருவேட்டையும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று மகோற்சவம் நிறைவுபெற இருக்கின்றது.
இவ்வாலயத்தின் மகோற்சவத்தினை தேரோட்டம் என அழைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.