யாரிடம் சொல்வோம் இந்த அநீதியை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே கரடியன் ஆறு பிரதேச எல்லைக்குட்பட்பட்ட கித்துல் கிராமத்திக்கு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் அப்பிரதேச மக்களின் வாழ்வியல் முறைகளை ஆராய்வதற்காக சென்றபோது எனது பார்வைக்கு உட்பட்ட பழமைவாய்ந்த மண் சுவர் வீடுகளை காணமுடிந்தது. இந்த வீட்டின் வாரலாறுகள் மிகவும் பழமைவாய்ந்தாலும் இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருப்போறின் உண்மையான விடயங்களை வெளிக்கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவை.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட ஊழல்கள் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் அதற்கான விசாரனைகளோ நடைபெறாது மூடிமறைக்கப்பட்டு வரும் வேளையிலும் ஊடகங்களின் பார்வை மட்டுமல் அரச அதிகாரிகளின் பார்வையும் ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்ற மனநிலைப்பாடுடன் வழக்கமானதாக உள்ளது. எனவே இவ்வாறான விடயங்களை மீன்டும் மீன்டும் சுட்டிக்காட்டுவது இனிமேலும் இவ்வாறான ஊழல்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே தவிர யாரையும் தனிப்பட பாதிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இல்லை. அந்தவகையில் கித்துல் கிராமத்தில் அரசினால் வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது அந்த வீட்டு திட்டம் அப்பிரதேச மக்களின்

#வாழ்வாதாரம்,

#பொருளாதாரம் குறைந்த குடும்பம்,

#யுத்த இழப்புக்குகள்,

#பாதுகாவலர் இல்லாதவர்கள்,

#விதவைகள்,

என்ற நிலைப்பாட்டில் வழங்கப்பட்டு வந்துள்ளது அந்தவகையில் எனது பதிவில் உள்ள மண் சுவர் வீட்டுக்கு பொறுப்பானவர்கள் கடந்த கால யுத்ததின் ஊடாக தமது சொந்த வீட்டை இழந்தார்கள், சொந்த பெற்ற பிள்ளைகளை இராணுவத்தின் துப்பாக்கி சூட்டின் மூலம் இழந்தார்கள் ஆனாலும் அனைத்து இழப்புக்களுடன் எந்த வித உதவிகளும் இன்றி வறுமையின் பிடியிலும் யுத்தத்தின் பிடியிலும் தங்களது கஷ்டங்களை வெளியில் சொல்ல முடியாது இந்த மண் சுவர் வீட்டினுள்ளே முடக்கி விட்டார்கள் அப்படியிருந்தும் அரச வீட்டுத்திட்ட உதவிகளின் ஊடாக ஒரு வீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வீடு வழங்குவதாக அரச அதிகாரிகளால் கூறப்பட்டும் ஆவனங்கள் நிரப்பட்டு கையெழுத்து பெறப்பட்டும் வீடு இது வரை கிடைக்கவில்லை இதற்கான காரணத்தை உரிய அதிகாரிகளிடம் கேட்டுச்சென்றால் பொறுப்பற்ற கதைசொல்லி காலத்தை கடத்துவது நியாயமானதா?

அத்தோடு இப்பிரதேசத்தில் வழங்கப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றுக்கும் அரச அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளினது தரகர்களினாலும் பணம் இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பிரதேச மக்கள் மிக கவலையுடனும் அச்சத்தோடும் தங்களை வெளியில் வெளிகாட்டக்கூடாது என்று மனநிலைப்பாடுடன் தெரிவித்தனர்.

பொறுப்பு வாய்ந்த நீதிபதிகளே இவ்வாறான ஊழல்களை யாரிடம் சொல்லுவது? சொல்லவேண்டியவர்களும் ஊழல்வாதிகள் என்றால் யாரிடம் சொல்வது?