இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை

கிழக்கு , ஊவா வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடனான வானம் காணப்படும் .
கிழக்கு மற்றும் ஊவா ,வடக்கு ,வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சில பகுதிகளில் குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு , முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.

 

மேற்கு ,சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் இடைக்கிடையே ஓரளவிற்கு மழை பெய்யும் என்றும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னலின் போது ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுள்கொண்டுள்ளது.