களுதாவளையில் விபத்து ஒருவர் பலி

பழுகாமம் நிருபர். – மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி  களுதாவளையில் இடம் பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
  மோட்டார் சைக்கிளில் பயணித்த களுதாவளை முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த மகாராஜன் இதயராஜ் வயது 22 என்பவரே குறித்த விபத்து சம்பத்தின் உயிரிழந்துள்ளார்.
  குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
 திருகோணமலை இருந்து அம்பாரையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான வஸ்வண்டியுடனும், பிக்கெப் வாகனத்துடனும் மோட்டார் சைக்கிள் மோதியதனாலயேகுறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
   மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த இளைஞன்   முன்னால் சென்ற பிக்கெப் வாகனத்தை முந்தி செல்ல எத்தணித்தவேளை கெப் வாகனத்தில் மோதி எதிரில் வந்த தனியார் பஸ்வண்டியுடனும் மோதியுள்ளார். பலத்த விபத்துக்கு உள்ளான இளைஞன் சம்பவ இடத்திiலையே உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து  மஞ்சள் பாதசாரி கடவையிலேயே  இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்  பஸ்வண்டி சாரதி, பிக்கெப்  சாரதி ஆகியோரிடம்  களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.