ரெலோ­வின் பரிந்­து­ரை­யைப் புறந்­தள்ளி அமைச்­ச­ராக குண­சீ­லனை நிய­மிக்க விக்கி தீர்­மா­னம்

ரெலோ சார்­பில் க.விந் தனை அமைச் ச­ராக நிய மிக்­கு­மாறு அந்­தக் கட்சி பரிந்து­ரைத்­துள்­ள­ போ­தும் அத­னைப் புறந் தள்­ளிய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ரன், மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரெலோ­வின் உறுப்­பி­ன­ரான ஜி.குண­ சீ­லனை சுகா­தார அமைச் ச­ராக நிய­மிக்கு­மாறு ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு கடி­தம் அனுப்­பி ­யுள்­ளார்.

வடக்கு மாகாண அமைச் சர்­கள் த.குருகுல­ராசா, பொ.ஐங்­க­ர­நே­சன் இரு­வ­ரும் முத­ல­மைச்­ச­ரின் விசா­ர­ணைக் குழு­வால் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்ட பின்­னர், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யுமே மாற்ற வேண்­டும் என்­பதை தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அதில் விடாப்­பி­டி­யா­க­வும் நின்று கொண்­டார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கு­கின்­றார் என்று தெரி­வித்து அந்­தக் கட்சி, வடக்கு அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­ப­தில்லை என்ற முடிவை எடுத்­தது. வடக்கு அமைச்­ச­ர­வை­யில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ப.சத்­தி­ய­லிங்­கம் தனது பத­வி­யி­லி­ருந்து வில­கும் முடிவை முத­ல­மைச்­ச­ருக்கு அறி­வித்­தார். அதனை முத­ல­மைச்­சர் ஏற்­றுக் கொண்­டார்.

மற்­றொரு அமைச்­ச­ரான பா.டெனீஸ்­வ­ரன் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக மாட்­டேன் என்று தெரி­வித்­தி­ருந்­தார். அத­னால் அவரை ரெலோ­வி­லி­ருந்து ஆறு மாதங்­கள் இடை­நி­றுத்­து­வ­தா­க­வும், தமது கட்சி சார்­பில் க.விந்­தனை அமைச்­ச­ராக நிய­மிக்­கு­மா­றும் முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­தது. ஆனா­லும் அந்­தக் கட்­சி­யி­னுள் ஜி.குண­சீ­லனை நிய­மிக்க வேண்­டும் என்று ஒரு தரப்பு வேண்­டு­கோள் முன்­வைத்­தி­ருந்­தா­லும், கட்­சி­யின் இறுதி முடி­வாக க.விந்­தனே பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ரெலோ­வின் முடி­வைப் புறந்­தள்ளி, ஜி.குண­சீ­லனை சுகா­தார அமைச்­ச­ராக நிய­மிப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளு­மாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரேக்கு நேற்­றுக் காலை கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.