மட்டக்களப்பில் குப்பை மேட்டில் தீ

மட்டக்களப்பு திருப்பெரும் துறை குப்பை மேட்டில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

தீ பரவலை கண்ட மக்கள் பொலிசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவலை வழங்கியத்தை அடுத்து தீயை அணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த தீ பரவல் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

 

இந்தக் குப்பைமேட்டில் ஏற்கனவே ஒரு தடவை தீவிபத்து ஏற்பட்டு பூரணமாக அணைக்க இருவாரம் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.