மகிழடித்தீவில் புனரமைப்பு செய்யப்பட்ட நினைவு தூபி மீண்டும் திறப்பு

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பகுதியில் 1987, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவுதூபி புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் திறக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(21) மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கொக்கட்டிச்சோலைப் பகுதியில் 1987, 1991ம் ஆண்டு காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக 2002ம் ஆண்டு மகிழடித்தீவு சந்தியில் நினைவு தூபி அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இத்தூபியானது 2007ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்டு 10வருடங்கள் கடந்த நிலையில் இவ்வருடம்; புனரமைப்பு செய்யப்பட்டு புத்துயிர் பெறவைக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம், படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக தைமாதம் 28ம் திகதி நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.