சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) முதல் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

தங்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை கொழும்பிற்கு மாற்ற வேண்டாம் என கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், வவுனியாவில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.