மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலாளர் வெற்றிக்கிணத்தினை வெற்றுகொண்டது மாவட்ட செயலக அணி

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கிறிக்கட் போட்டியின், பிரதேசசெயலாளர் வெற்றிக்கிணத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிகொண்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின், உத்தியோகத்தர்களிடையே கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களாக கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நடாத்;தப்பட்ட கிறிக்கட் போட்டியில், முதலிடத்தினை மட்டக்களப்பு மாவட்டசெயலக அணியினரும், இரண்டாம் இடத்தினை களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் அணியினரும், மூன்றாம் இடத்தினை செங்கலடி பிரதேச செயலக அணியினரும், 4வது இடத்தினை பட்டிப்பளை பிரதேச செயலாளர் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
முதல் நான்கு இடங்களையும் பெற்று வெற்றிபெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களும், முதல் மூன்று இடங்களை பெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களுடன், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ஆட்டநாயகனுக்கான கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இக்கிறிக்கட் போட்டி, முதன்முறையாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவினால் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.