கலைஉணர்வினையும், எண்ணங்களையும் தூண்டிவிட பட்டமிடும் நிகழ்வு

(படுவான் பாலகன்) சிறுவர்களினால் பட்டமிடும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இதனை கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து ஒழுங்குபடுத்தி நடாத்தினர்.
கலாசார திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.
பாடசாலை விடுமுறையான சூழலில், சிறுவர்களின் கலை உணர்வினையும், பொழுதுபோக்கினையும், எண்ணங்களையும் தூண்டிவிடும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுவர்கள் பலவர்ண பட்டங்களை தயார்செய்து வானில் பறக்கவிட்டனர்.
இதில் பங்கேற்றிருந்த சிறுவர்களுக்கு, அவர்களின் ஆக்கத்திறனுக்காக பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.