வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்களால் சிரமதானப்பணி

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் கடந்த காலத்தில் படையினரின் முகாமாக காணப்பட்டது மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பின்னர்  அங்கிருந்து படையினர் வெளியேறினர். .

இன்னிலையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பிரதேச மக்களும் இணைந்து இன்று(20.08) காலை மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதில் மாவீரர்களின் நினைவுக் கற்கள் அனைத்தும் படையினரால் அகற்றப்பட்ட நிலையில் அங்கு உள்ள வேப்பமரம் ஒன்றின் கீழ் மாவீரரின் நினைவு கல் ஒன்றினை வைத்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள் இதில் சுடரினை மாவீரர் கனிச்சுடரின் தாயர் ஏற்றிவைக்க துப்பரவு பணிக்காக வருகைதந்த மக்கள் மலர்தூவி வணக்கம் செலுதி துப்பரவு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்