கல்முனையில் மாவட்டபுற்றுநோய்கட்டுப்பாட்டுப்பிரிவு அங்குரார்ப்பணம்

இலங்கையில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டுசெல்கிறது! கல்முனையில் தேசிய புற்றுநோய்த்தடுப்பு இயக்கபணிப்பாளர் சமரவீர கூறுகிறார்!

*இலங்கையில் புற்றுநோயின் தாக்கம் நாளுக்குநாள்  அதிகரித்துக்கொண்டு வருகிறது.
அதற்கு கல்முனைப்பிராந்தியமும் விதிவிலக்கல்ல. அதனைக்கட்டுப்படுத்துவதாயின்
நாம் அர்ப்பணிப்புடன் மேலும் தீவீரமாக தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க
வேண்டியிருக்கிறது..

*இவ்வாறு கல்முனையில் மாவட்ட புற்றுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவை
அங்குரார்ப்பணம்செய்துவைத்து உரையாற்றிய இலங்கை தேசிய புற்றுநோய் தடுப்பு
இயக்கப் பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.*

*புற்றுநோய்க் கட்டுப்பாடு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நேற்று
கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைத்திணைக்களத்தின் தொற்றாநோய்ப்பிரிவு
வைத்தியஅதிகாரி  டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் தலைமைப்பணிமனையில்
நடைபெற்றது.*

*இக்கூட்டத்தில் பணிப்பாளர் சுதத்துடன் கொழும்பிலிருந்து வைத்தியகுழாத்தினரும்
வருகைதந்திருந்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்
சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கலன மெண்டிஸ் வைத்தியஅதிகாரி இக்பால் அஸ்ரப்
ஆதாரவைத்தியசாiலின் சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் சமீம் கல்முனைப்பிராந்திய
சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர் எ.எல்.அலாவுதீன் மற்றும் வைத்தியசாலைகளின்
அத்தியட்சகர்கள் பொறுப்பதிகாரிகள் சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையக
அதிகாரிகள் எனப்பலர் பங்குபற்றினர்.*

*கூட்டத்தில் கல்முனை மாவட்ட புற்றுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவொன்று
அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.*

*அங்கு பணிப்பாளர் மேலும் கூறுகையில்:*

*கடந்த காலங்களைவிட தற்காலத்தில் இந்நோயின் தாக்கம்
அதிகரித்துக்காணப்படுகின்றது. வாயப்புற்றுநோய் மார்பகப்புற்றுநோய்க்கான ஆரம்ப
ஸ்கிறீனீங் பரிசோதனையை இங்கு செய்யலாம். கல்முனை ஆரோக்கிய வாழ்வு மையம் அதனை
முன்னெடுத்து வருகின்றது. அதனை மேலும் திவீரமாக முன்னெடுக்கவேண்டும்.
ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சுகப்படுத்துவது இலகு. முற்றினால்
கஸ்ட்டம்.*

*வாயப்புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரண ங்களைக்கூறுவர். குறிப்பாக வெற்றிலை
பாக்கு புகையிலைப்பாவனை மதுப்பாவனை  புகைத்தல் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற
உணவுகளை உள்ளெடுத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.*

*இவற்றைத்தடுப்பதனூடாக கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரலாம். அதற்காக இன்று
மாவட்ட கட்டுப்பாட்டுப்பிரிவு ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. வைத்தியபணிப்பாளர்
அலாவுதீன் தலைவராகஇருந்து செயற்படுவார்.  **டாக்டர் **ஹாரீஸ் தலைமையிலான
குழுவினர் கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். *

*அனைவரும் இணைந்து அர்பப்புடன் செயற்பட்டு இக்கொடிய  நோயிலிருந்து
மக்களைக்காப்பாற்றவேண்டும். என்றார்.*