கட்டுமுறிவுக் கிராமத்தில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவுக் கிராமமானது வாகரை பிரதான வீதியில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வாழும் மக்கள் மிக நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் இன்றி குளங்களிலும், பொதுக்கிணறுகளிலும் தமது குடி நீர் தேவையினை நிறைவு செய்து வந்தனர்..

இம்மக்களின் நீண்டகால குடிநீர்த் தேவையினை நிறைவேற்றிக்கொடுக்கும் நோக்கில் வாகரை வேள்ட் விஷன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாகரைப் பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட குடிநீர்த் திட்டமானது கடந்த 18.06.2017 ஆம் திகதி பொது மக்களின் பாவனைக்கு சம்பிரதாய பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது வாகரைப்பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர அப்துள் ஹாருன், வேள்ட் விஷன் நிறுவன உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் என  பலர் கலந்து சிறப்பித்தனர்.