இன்று கிழக்கின் முதலாவது இலவச இயன்மருத்துவ (பிசியோதெரபி) சேவை முகாம் கல்முனையில்!

கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை  கேட்போர் கூடத்தில்  பெரிய அளவிலான இலவச இயன்மருத்துவ (பிசியோதெரபி) சேவை இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது..

 
இம் மருத்துவமுகாம் தரமான பல்துறை சார் நிபுணத்துவம் வாய்ந்த இயன்மருத்துவர்களால் இன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் நடத்தப்பட வுள்ளது.
 
இவ் இலவச இயன்மருத்துவ சேவை உண்மையிலேயே வறுமையான கஷ்டப்பட்ட மக்கள் பயனடையும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது..
 
இவ் இயன் மருத்துவ சேவை மூலம் எலும்பு தசை நரம்பு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடையவர்கள் சிகிச்சைகளையும் இயன்மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.. 
 
இதன் போது பக்கவாதம் இடுப்பு வலி தோள் மூட்டு இறுக்கம் முழங்கால் மூட்டு வீக்கம் மற்றும் முள்ளந்தண்டு சம்மந்தமான பிரச்சினை  ஆதரைற்றிஸ்  குதிக்கால் வலி குழந்தைகளில் ஏற்படும் மூளை முடக்குவாதம் விளையாட்டு உபாதைகள்  பெண் நோயியல் இயன்மருத்துவம்  குழந்தைநல இயன்மருத்துவம் சத்திர சிகிச்சைக்குப் பின்னரான இயன்மருத்துவம் போன்ற பல பிரிவுகளில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.