அரச உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தவே விளையாட்டுப் போட்டி

(படுவான் பாலகன்)  திணைக்கள உத்தியோகத்தர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலே கிறிக்கட் சுற்றுப்போட்டி நடாத்தப்படுகின்றது. என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கிடையிலான, கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று(19) சனிக்கிழமை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு, போட்டி வீரர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டார்.
முதன்முறையாக பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணம் என்ற தொனியில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால், இப்போட்டி நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அணி, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அணி என பல திணைக்களங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபற்றியுள்ளன.
போட்டியின் ஆரம்ப நிகழ்வில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், விளையாட்டு உத்தியோகத்தர், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.