தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க தீர்மானம்

யாழ். நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க உள்ளதாக வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று (17) சபையில் அறிவித்தார்.

வடமாகாணசபையின் கடந்தகாலச் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு செய்யும் 102ஆவது சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது, தியாகி திலீபனின் நினைவிடம் புனரமைப்பு குறித்து தெரிவித்தார்.

இந்த நினைவிடம் தான் யாழ். மாநகர ஆணையாளராக இருந்த காலப்பகுதியில் புனரமைக்கப்பட்டதாகவும் அதனால் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதாகவும் குறிப்பிட்டார் நினைவிடத்தை புனரமைப்பு செய்வது தொடர்பில் யாழ்.மாநகர ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்ப உள்ளதாகவும், நினைவுத் தூபியின் பகுதியில் பாதுகாப்பு வலயம் அமைத்து அவற்றை பராமரிப்புச் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் மாகாண உள்ளூராட்சி அமைச்சராக இருக்கின்ற முதலமைச்சரும் விசேட கவனம் செலுத்தி புனரமைப்புச் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.