பாடசாலைகளில் டெங்கை கட்டுப்படுத்த புகைவிசுறும் செயற்பாடு

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் புகைவிசுறும் நடவடிக்கை இன்று(18) வெள்ளிக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நுளம்பினை இல்லாமல் செய்யும் நோக்கில், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இப்புகைவிசுறல் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.


தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகளிலே, புகைவிசுறல் நடவடிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.