புலிபிடித்தசேனையில் மீண்டும் நேற்றிரவு 18 கட்டைகள் நடப்பட்டுள்ளன

புலிபிடித்தசேனையில் மீண்டும் நேற்றிரவு 18 எல்லைக்கட்டைகளை வனஇலாகாவினர் நட்டுள்ளதாக பொத்துவில் புலிபிடித்தசேனை கமக்காரர் அமைப்பின்  செயலாளர்  ஜே.என்.சுல்தான்(ஆசிரியர்) தெரிவித்தார்.

புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலாளர் அலுவலகத்தில்
புலிபிடித்தசேனை பொதுமக்களுக்கும் வன இலாகாவின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட குழுவினருக்குமிடையே பிரதேசசெயலர் முஸர்ரப் முன்னிலையில் இடம்பெற்ற சந்திப்பில் இரவு வேளைகளில் எல்லைக்கட்டைகள்  இடுவதில்லையெனவும் குழுவொன்றை நியமித்து தீர்வெடுப்பதாகவும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில்  புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆயுதம் சகிதம் வந்த வன
இலாகாவினர் 18 கட்டைகளை எமது காணிகளில் நட்டுள்ளனர்.

இது தொடர்பாக வியாழக்கிழமை காலை பொத்துவில்
பிரதேசசெயலகத்திற்குச்சென்று முறையிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக பிரதேச
செயலாளர் தெரிவித்தார். நாம் மீண்டும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடாத்த
வேண்டுமா? என்று கேட்கின்றோம். எம்மைக்கவனிக்க எமது காணியை காப்பாற்ற யாரும் இல்லையா? நாம் வாக்களித்தவர்கள் எங்கே? என அவர் வினாவெழுப்பினார்.

பிரதேச செயலாளர் முஸர்ரப் விளக்கம்!

இது தொடர்பாக பொத்துவில் பிரதேச செயலாளர் முஸர்ரப்பிடம் கேட்டபோது அவர்
இவ்வாறு கூறினார்.

குறித்த புலிபிடித்தசேனைப்பிரதேசத்தில் மக்களின் காணிகளில் வன இலாகாவினர்
எல்லைக்கட்டைகளை இடுவதாகக்கூறி  மக்கள் ஆர்ப்பாட்டம்
நடாத்தினர்.*

நான் தலையிட்டு  எனது அலுவலகத்தில் மக்களுக்கும் வன
இலாகாவினருக்குமிடையே சந்திப்பை ஏற்படுத்தி இரவுவேளைகளில் கட்டை
போடுவதில்லையென இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில்  அம்மக்கள் மீண்டும் வந்து வனஇலாகாவினர்
கட்டை போட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். நாங்கள் அரச அதிகாரிகள் . நீங்கள்
வனஇலாகாவினருடன் பேசிப்பாருங்கள். என்றார்.இதேவேளை பொத்துவில் மதுரம்வெளியிலுள்ள புலிபிடித்தசேனை எனும் பிரதேசத்தில்
முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650ஏக்கர் குடியிருப்புக்காணியை வனபரிபாலன
இலாகாவினர் ஆக்கிரமித்துவருவதாகக்கூறி  எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும்
ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆர்ப்பாட்டம் இடம்பெற்று மறுநாளிரவு மீண்டும். 18 கட்டைகள் நடப்பட்டிருப்பது
மேலும்  அங்கு நிலைமையை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.