வட்டுக்கோட்டை அரங்க மரபு நூல் வெளியீடு

(படுவான் பாலகன்) வட்டுக்கோட்டை அரங்க மரபு நூல் வெளியீட்டு விழா நேற்று(16) புதன்கிழமை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தில் இடம்பெற்றது.
ச.தில்லைநடேசனால் எழுதப்பட்ட இந்நூலின் வெளியீட்டினை கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையேற்று நடத்தினார்.
இதன்போது, நூலின் முதற்பிரதியை ச.தில்லைநடேசனிடமிருந்து சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் பெற்றுக்கொண்டார்.
நூலுக்கான மதிப்பீட்டு உரையை, பேராசிரியர் சி.மௌனகுரு, சு.சந்திரகுமார், த.விவேகானந்தராசா, இ.குகநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.