கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தனிப்பட்ட நிதியுதவி மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் தனிப்பட்ட நிதியுதவி மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு ஆரையம்பதி மாவிலங்குதுறையில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது..
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பிரதேச பிரமுகர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பொதுமக்கள் உதவி பெறுவோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவிலங்குதுறையை கராம அபிவிருத்திச் சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுயதொழிலில் ஈடுபடும் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரி;ன் தனிப்பட்ட நிதியுதவிச் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் தலா 3500 ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணப் பொதிகள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் பிரச்சினைகள் தொடர்பிலும் கிராம அபவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.