களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று புதிய பிரதேச செயலாளராக சிவப்பிரியா வில்வரெத்தினம்

களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று  புதிய பிரதேச  செயலாளராக சிவப்பிரியா வில்வரெத்தினம் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலையிலையே குறித்த இடமாற்றம் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்  வழங்கப்பட்டுள்ளது.
   இலங்கை நிருவாக சேவை தரம் ஒன்றைச்சேர்ந்த இவர்  பதில் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார பிரதி பணிப்பாளராகவும், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்….
இதுவரை காலமும் மண்முனை தென் எருவிற்பற்று பிரதேச செயலாளராக சிறப்பாக கடமையாற்றிய பிரதேச செயலாளர் திரு ரங்கனாதன் பிரியாவிடை பெற்று நாவிதன்வெளிபிரதேசத்திற்கு பதவியுயர்வுடனான பிரதேசசெயலாளராக செல்கிறார் .