மட்டில் கிராமியப் பாலங்களைப் புணரமைத்தல் மற்றும் நிருமானித்தலைத் துரிதப்படுத்த நடவடிக்கை; – ஞா.ஸ்ரீநேசன் M.P

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பாலங்களை அமைத்தலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். .
இதன்அடிப்படையில்உள்@ராட்சி அமைச்சின் கிராமியப் பாலங்களைப் புணரமைத்தல் மற்றும் நிருமானித்தல் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமானிக்கப்படவுள்ள பாலங்களின் வேலைகளைத் தொடங்குவதற்குப் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூராட்சி அமைச்சின் அதிகார்கள் ஞா.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் தெரிவித்ததன் பிரகாரம் இன்று (15.08.2017) உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள், மாகாண உள்ளூராட்சித் திணைக்களப் பொறியியலாளர் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம்  ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தலைமையில் பிராந்திய  உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தின் பின்னர் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட காரைக்காடு (வேப்ப வெட்டுவான்) பாலம், 9ம் கொலனி ஆயித்தியமலைப் பாலம், மணிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலடி வீதிப் பாலம், கரடிப்பூவல் (வவுணதீவு) பாலம் என்பவற்றிற்கு கன விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஒவ்வொரு பாலம் அமைப்பதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டதோடு பாலங்களை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடருமாறு ஒப்பந்தகாரர்களுக்கு அறிலுறுத்தல் வழங்கப்பட்டது. தாமதங்களைத் தீர்ப்பதற்கு உதவிய மாகாண உள்ளுராட்சி பொறியியலாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், ஒப்பந்தக்காரர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
மேலும் மீள்குடியேற்ற புணர்வாழ்வு அமைச்சின் அனுசரனையுடன் கொங்கீறிட் இடப்படும் ஆயித்தியமலை – நெல்லிக்காடு வீதியும்  பார்வையிடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மேலும் தெரிவித்தார்.