பேஸ்புக் ஊடாக நகைகள் கொள்ளை

பேஸ்புக் உள்­ளிட்ட சமூக இணை­யத்தின் ஊடாக பெண்­க­ளுடன் தொடர்பு கொண்டு நட்­பு­ற­வாடி அவர்­க­ளிடம் தங்க நகை மற்றும் உடை­மை­களை கொள்­ளை­யிடும் சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலிஸார் அது தொடர்­பி­லான பிர­தான சந்­தேக நபர் ஒரு­வரை நேற்று முன் தினம் இரவு கைது செய்­துள்­ளனர்.

அவி­சா­வளை, சீதா­வக்க வித்­தி­யா­லய மாவத்­தையில் வைத்து மிரி­ஹான விஷேட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்த சந்­தேக நபரை  கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

33 வய­தான நிவித்­தி­கலை பகு­தியைச் சேர்ந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த சந்­தே­க­நபர் சமூ­க­வ­லைத்­த­ளங்கள் ஊடாக பெண்­க­ளுடன் நட்­பு­ற­வாடி திரு­மணம் புரி­வ­தாக கூறி இந்த கொள்­ளையில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தான் நட்பை பேணு­கின்ற  பெண்­களை நேரில் அழைத்து அவர்­க­ளிடம் தங்க நகை மற்றும் பெறு­ம­தி­வாய்ந்த பொருட்­களை சந்­தேக நபர் கொள்­ளை­யிட்­டுள்ளார்.

இந் நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில்  பாதுக்க, களுத்­துறை வடக்கு மற்றும் தெஹி­வளை ஆகிய பிர­தே­சங்­களில் பல்­வேறு கொள்­ளைகள் உள்­ளிட்ட குற்றச் செயல்­களை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.