12 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வறட்சியினால் பாதிப்பு

வறட்சி காரணமாக 19 மாவட்டங்களில் சுமார் 12 இலட்சத்து 50 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

137 பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனத்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுமார் ஐந்து இலட்சம் பேர் வட மாகாணத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 35 ஆயிரத்து 476 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 28ஆயிரத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 248 பேரும் , திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 ஆயிரத்து 771 குடும்பங்களை சேர்ந்த 35 ஆயிரத்து 951 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.