அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வாகனேரி எனும் பிரதேசத்தில் அனைத்து வளங்களும் இருந்தாலும் பல்வேறு அடிப்படைத் தேவைகளில் குறைபாடு உள்ள பிரதேசமாகவே காணப்படுகின்றது.
கல்வி, சுகாதாரம்,போக்குவரத்து, விவசாயம் தொடர்பாக பிரச்சினை காணப்பட்டாலும் மிகவும் அத்தியாவசியமானதாகக் காணப்படும் குடிநீர் பிரச்சினை பல ஆண்டு காலமாகக் காணப்படுகின்றது.
இதன் காரணமாக நாம் பலமுறை அங்கு சென்று பிரதேச அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளி ஆசிரியர்கள்,  பாடசாலை ஆசிரியர்கள் , ஊர் மக்கள் ஆகியவர்களுடன் தொடர்புகளைக் கொண்டு குறைபாடுகளை அறிந்துள்ளோம்.
இதன் முதற்கட்டமாக இன்று (13/08) , இரண்டு மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட அறநெறி பாடசாலையை எமது Future mind அமைப்பினால் மீண்டும்  ஆரம்பித்து வைத்தோம்.
இதன் போது ஸ்ரீதரன்  அறநெறி பாடசாலையை அவரின் சொற்பொழிவுடன்  ஆரம்பித்து வைத்து அறநெறி பாடத்தின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர்களுக்கும் விளக்கினார்.