செஞ்சோலை படுகொலை 11ஆம் வருட நினைவேந்தல்

ஸ்ரீலங்கா விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு வீச்சு தாக்குதலின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர் தாயகப் பகுதிகள் உட்பட புலம்பெயர் நாடுகளில் அனுட்டிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா விமானப்படையின் மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டனர்..

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள், செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டன.

இத்தாக்குதலில்  பலியான மாணவர்களின் 11ஆம் வருட நினைவஞ்சலி இன்று வள்ளிபுனத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவஞ்சலி அனுஷ்டிப்பு, படுகொலை நடந்த இடமான செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பிள்ளைகளின் பெற்றோர் உறவினர்கள் உட்பட  நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.