மட்டக்களப்பு அபிவிருத்தி – அரசாங்க அதிபருக்கு வந்தகடிதம்

மட்டக்களப்பில் நடைபெற்று வரும் ஏட்டிக்குப்போட்டியான அதிகார, அரசியல் அபிவிருத்திப்பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை(14),  மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தத்திட்டங்கள் குறித்து செய்தியொன்று வெளியாகியிருந்தது.
அதனை அடுத்து   இரு பாராளுமன்ற உறுப்பினர்கள்  அறிக்கையினை வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது எமது இணையத்தளத்திற்கு அந்த அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்ட செயலாளருக்கு அமைச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரதி கிடைத்துள்ளது.
யார் குற்றினாலும் அரிசியாகவேண்டும் என்று நினைக்கவேண்டிய, செயற்படவேண்டிய நேரத்தில் ஏன் இந்தப்பிரச்சினை என்பது விளங்காதவர்களாக மக்கள்தான் கவலை கொள்கிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் பல இருக்கையில் ஏன் பிரதமருடைய ஆலோசனையில் இவ்வாறு பெரியளவான திட்டங்களின் அபிவிருத்தி குறித்து அறிவிக்கப்பட்டது என்பது இன்னொரு பக்கம் கேள்வியிருந்தாலும். கிடைத்திருக்கும் இக் கடிதப்பிரதியில் பல கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது எல்லோரும் வாசித்துப்பாருங்கள்.

குறிப்பு இக்கடிதம் எமக்கு மின்னஞ்சல் மூலம் எமது வாசகர் ஒருவர் எமக்கு அனுப்பிவைத்துள்ளார்.