பட்டத்தகைமையை கொண்டிராத பதவியில் சேவையாற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

(படுவான் பாலகன்) கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்படவுள்ள திறந்த போட்டிப்பரீட்சைக்கான அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அறிவித்துள்ளார்.

18வயது தொடக்கம் 45வயது வரையான பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும், தொழிலற்ற பட்டதாரி அல்லது ஆட்சேர்ப்புக்காக குறைந்த தகைமையாக பட்டமொன்று பெற்றிருத்தல் அவசியமானதொன்றாகக் கொண்ட பதவியிலுள்ள உத்தியோகத்தர் தவிர வேறு பதவியிலுள்ள பட்டதாரிகள் இப்பதவிக்காக விண்ணப்பிக்கலாம். போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கிழக்கு மாகாணசபையின் இணையளத்தில் பார்வையிட முடியும்.