மழையின் காரணமாக தாந்தாமலை பிரதான வீதியினுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு

(படுவான் பாலகன்)   மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று நாட்களாக  பெய்து கொண்டிருக்கும் மழையின் காரணமாக, மாவடிமுன்மாரி சந்தியிலிருந்து தாந்தாமலை செல்லும் பிரதான வீதியினூடாக போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் எற்பட்டிருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதி குன்றும், குழியுமாக காணப்படுவதினால்; நீர் நிரப்பியுள்ளதினால் அச்சத்தின் மத்தியில் போக்குவரத்து செய்யும் நிலையேற்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டனர்.
மழைபெய்தால், வீதியில் நீர் நிரம்பி போக்குவரத்து முற்றாக தடைப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் வருடாந்தம் ஏற்பட்டுவருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
வீதிக்கு அருகில் நெல்வயல்கள் அமைந்துள்ளதுடன், நெல்வயல்களை விட பணிவாக கிறவல் வீதி அமைந்துள்ளது. வீதிக்கு அருகில் நீர் வடிந்தோடும் வாய்கால்கள் தோண்டிவிடப்பட்டுள்ள போதிலும், வீதிக்கு நீர் செல்லாமல் இருப்பதற்கான தடுப்புச்சுவர்கள் அமைக்கபடவில்லை. இதனால் அதிகளவான நீர் வீதியினால் வடிந்தோடுகின்ற நிலையேற்பட்டிருக்கின்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.