பெண்ணொருவரை கடத்தி செல்ல முயன்ற கார் இளைஞர்களால் மடக்கிபிடிப்பு

ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட, 5ம் கட்டை சந்தியில் வைத்து பெண்ணொருவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
கொக்கட்டிச்சோலைப் பகுதியினைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கடத்தப்பட்டு, நேற்று கொக்கட்டிச்சோலைப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில், தெரியவருவதாவது, தொழில் புரிந்துவிட்டு, வீடு திரும்புவதற்காக பேரூந்தினை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெண்ணொருவரை, 5ம் கட்டை சந்தியில் வைத்து காரொன்றில் கடத்தி சென்றுள்ளனர். குறித்த பெண் மகிழடித்தீவு பிரதான வீதியில் வைத்து, கார் கதவை திறந்து கூக்குரல் இட்டமையால் வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த காரை வழிமறித்து பிடித்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணை கடத்திச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.