பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத்தாக்கிய மாணவர்களுக்குப்பிணை

கிழக்குப் பல்கலைக் கழக பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்;ட 9 மாணவர்களையும் இன்று (11) வெள்ளிக்கிழமை தலா ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது..

குறித்த சந்தேக நபர்கள் ஒன்பது பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பதில் நீதிவான் வி. தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன். தங்களது வாக்கு மூலங்களை ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யுமாறும் கட்டளையிட்டார். குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 13.09.2017 வரை ஒத்திவைத்தார்.

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைத்து 63 வது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) பிற்பகல் மாணவர்களால் நிருவாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கடமையின் நிமிர்த்தம் தடுக்க வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் எச்டி.சி.டி.ரணசிங்க (வயது 37) மாணவர்களால் தாக்கப்பட்டதில் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக் கழக நிருவாகத்தினால் ஏறாவூர்ப் பொலிஸில் முறைபாடு பதிசெய்யப்ப்டடது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களாக 9 மாணவர்களும் ஏறாவூர்பொலிஸாரினார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.