கோட்டைக்கல்லாற்றில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி  விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுடன் நான்கு வாகனங்களும் சேதமடைந்துள்ளது.
 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டி, போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி, மற்றும் லொறிரக வாகனம், சிறிய படி ரக வாகனம் ஆகிய நான்கு வாகனங்களுமே விபத்துக்குள்ளாகியுள்ளது..

மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி  பயணித்துக் கொண்டிருந்த சிறியபடி ரக வாகனத்தை பின்தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த லொறியானது முந்திச் செல்ல எத்தணித்ததனாலையே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
    மட்டக்களப்பில் இருந்து கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இறால் ஏற்றிச் சென்ற சிறியபடி ரக வாகனத்தை அதே திசையில் பின் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த லொறி முந்தி செல்வதற்கு எத்தணித்தவேளை, எதிர் திசையில்  பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த வஸ்வண்டியை கண்ட லொறி சாரதி செயய்வதறியாது முன்சென்ற படிரக வாகனத்தில் மோதியுள்ளார்.  லொறி மோதியதால் படிரக வாகனம் கட்டுப்பாட்டடை இழந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் மோதியுள்ளது. இதேவேளை எதிர்த்;திசையில் வந்த தனியார் வஸ்வண்டியும் செய்வதறியாது லோறியுடன் உரசியதனாலையே இவ் விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
   இவ் விபத்து சம்பவத்தில் படிரக வானத்தில் பயணித்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் நான்கு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. விபத்து இடம்பெற்ற குறித்த மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்திற்கு தடை  ஏற்பட்டதாகவும், பிரயாணம் செய்த பிரயாணிகள் கடும் அசௌகரியங்களை எதிர் நோக்கியதாகவும் பிரயாணிகள் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்….