நல்லாட்சி அரசின் ஜனநாயகவிரோத செயல்பாடே மாகாணசபை தேர்தல்களை பிற்போடல்: பா.அரியநேத்திரன் மு.பா.உ

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக நல்லாட்சி அரசு அக்கறைசெலுத்துவதை காலம் தாழ்த்தி மாகாணசபைக்குரிய அதிகாரங்களை பாராளுமன்றம் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது சிறுபாண்மை மக்களின் கொஞ்ச அதிகாரப் பகிர்வையும் இல்லாமல் செய்யும் செயல் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன் ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமானபாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். .

   கிழக்குமாகாணசபையை உரியகாலத்தில் தேர்தல் நடாத்தாமல் அதனை பிற்போட அரசு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எமது செய்தியாளர் கேட்டபோது தொடர்ந்து கருத்துகூறுய பா.அரியநேத்திரன் மாகாணசபைகளின் தேர்தல்களை ஒருநாளில் நடத்தவேண்டும் என்பதை சாட்டாக வைத்து 13இவது அரசியல் யாப்பு திருத்த சட் டத்தில் மகாணசபைகளுக்கு ஏற்கனவே வழங் கப்பட்ட அதிகாரங்கள் 18இவது அரசியல் திருத் தசட்டமூலம் பறிக்கப்பட்டன தற்போது எஞ்சி யுள்ள முதலமைச்சருக்கான அதிகாரங்களும் 20இவது அரசியல் யாப்பு திருத்தம் மூலம் பாரா ளுமன்றத்திற்கு ஒப்படைக்கும் சட்டமூலமான து ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை அரசாங்கம் வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளன அதற்காக சட்டமூலம் கொண்டு வர ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.
   தொடர்ச்சியாக மாகாண சபைக்குரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றமே மேற்கொள்ளுகின்ற சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக சந்தேகம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.  ஆனால் வடகிழக்கு தமிழ்பேசும்மக்களுக்கான அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவேண்டுமென கடந்த 2015இல் புதிய அரசை தோற்றுவித்த ஐனாதிபதி மைத்திரி அரசானது நல்லாட்சி அரசாக தம்மை காட்டிக்கொண்டு அதற்காக பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டபோதும் இரண்டுவருடங்கள் கடந் த நிலையிலும் அதன் செயல்பாட்டு ஒரு அறிக் கைகூட இதுவரை பாராளுமன்றத்தில் சமர்பி க்கவில்லை
       கடந்த 2016 ஐனவரி மாதம் முதலாவது அறிக்கை பாராளுமன்றில் சமர்பிக் கப்படும் என அறிவித்தபோதும் 2017இஅக்டோ பர் மாதம் வரை அரசியலமைப்பு திருத்தம் பற்றிய எந்த அறிக்கைகளும் பாராளுமன்றத் தில் விவாதிக்கப்படவில்லை. இதன் காரணமாகவேதான் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர் கட்சி தலைவ ருமான சம்மந்தன் ஐயா அண்மையில் தம்மை சந்தித்த பிரிட்டன் நாட்டு இராஐதந்திரகளிட ம் அரசாங்கத்தின்வேகம் குறைவானதாகும் என்றும்இ அது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்க வேண் டும்.
 மாகாணசபை முறை வடகிழக்கு தமிழ்பேசும் மக்களுக்காகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக 13இவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ஏனய மகாணசபைகளுக்கு எந்த திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புக்கள் இருக்காது ஆனால் வடமாகாணசபை கிழக்கு மாகாணசபை என்பவற்றில் இருக்கும் அதிகார ங்களும் மத்திய அரசு கட்டுப்படுத்த வாய்ப்புக ள் உள்ளன.
எனவே இந்த ஜனநாயகவிரோத மாகாணச பை சட்டமூலத்தை தமிழ்தேசியகூட்டமைப்பு ஆழமாக பரிசீலித்து அதை எதிர்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு தமிழ்தேசியகூட்ட மைப்பினராகியநாம் கடந்த காலங்களில் சிறு பாண்மை மக்களுக்கு பாதகம் விளைவிக்ககூ டிய சகல திருத்த சட்டங்களையும் எதிர்த்து வாக்களித்த வரலாறு தமிழ்தேசியகூட்டமைப் புக்கு மட்டுமே உண்டு என்பதையும் அனைவரு ம் புரிந்துகொள்ளவேண்டும்.