கிழக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகம ஆகியோருக்கிடையில், இன்று (09) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், கிழக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45 என, அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், தற்போது கிழக்கு மாகாண சபையால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையிலேயே,  நியமன வயதெல்லை 45 ஆக மாற்றப்பட்டுள்ளது. கிழக்கில் உள்ள 4,000  மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் முதற்கட்டமாக, 1,700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.