கொக்கட்டிச்சோலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றியவர் கைது

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் வைத்து, சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றியவர் என்ற குற்றாச்சாட்டின் கீழ் ஒருவர் இரவு(08) கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இரவுவேளையிலும், மண்ணேற்றுவதற்கான அனுமதிபத்திரம் இன்றி மண்ணேற்றி சென்ற ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மண்ணேற்றி சென்ற கென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதாக மேலும் குறிப்பிட்டனர்.