புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

சண்முகம் தவசீலன்

 

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட  பயனாளிகள்  தமக்கான சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டத்தில் தவறுகளை சுட்டிக்காட்டி தமக்கு சமுர்த்தி வழங்கவேண்டுமென கோரி போராட்டத்திலீடுபட்டனர்

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதிலுள்ள தவறுகளுக்கும் மாவட்ட செயலாளர் உரிய பதில் தரவேண்டுமென வலியுறுத்தி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை தொடர்ந்தனர்

இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மாவட்ட செயலாளர் தமக்கு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்திலீடுபட்டு வந்தனர் தொடர்ந்து   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்துக்கு வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சமுர்த்தி தொடர்பான ஆய்வொன்று நடைபெற்று வருவதன் காரணமாகவே தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரிடமும்  மகஜரொன்றை கையளித்து போராட்டத்தை நிறுத்தினர்

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடமும் மகயர் கையளிக்கப்பட்டதோடு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மாகாணசபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களும் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருன்தது குறிப்பிடத்தக்கது.