இந்த அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டுவரை யாரும் ஒரு மயிர் கூட பிடுங்கிவிடவும் முடியாது, யாரும் ஆட்டிபார்க்கவும் முடியாது. – எம்.எஸ்.எஸ்.அமீரலி

 பழுகாமம் நிருபர் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டுவரை யாரும் ஒரு மயிர் கூட பிடுங்கிவிடவும் முடியாது, யாரும் ஆட்டிபார்க்கவும் முடியாது. என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் சேவை நிறைவை முன்னிட்டு நுவரேலியா அம்பேவல பற்பண்ணையின் புதியதொழிநுட்ப இயந்திரம் பொருத்தப்பட தொழிற்சாலையை நேற்று முன்தினம் பிரதமர்  திறந்துவைத்தார் இந் நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்
    இந்த நாட்டின் உடைய பிரதமர் அவர்கள் 40 வருடதனது  அரசியல் வாழ்வை முடித்துவிட்டதன் பின்பாக நுவரேலியா மாவட்ட அன்பின் காரணமாக ஓடோடி வந்து சுமார் 500 கோடி ரூபாள் பெறுமதியான ஒரு பாற்பண்னை தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளார் என்றால் மலையக மக்களுக்கு கிடைத்துள்ள நற்பேறு என்பதனை என்னால் இவ்விடத்தில் அடித்து கூறமுடியும். எனவே எனது அன்புமிக்க மலையக சமூகமே இன்று நீங்கள் வந்திருக்கின்றீர்கள் 40 வருடம் அரசியல் செய்த ஒரு அரசியல் தலைவன் தனது சாதனையை முடித்துவிட்டு ஓடோடி வந்துள்ளார்.  500 கோடி ரூபாய் செலவிலே இந்த ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மலைய சமூகத்திற்கு பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்பாட்டை எண்ணி நானும் அவ்மொழிசார்ந்தவன் என்றவகையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.
    அன்புக்குரியவர்களே கடந்த ஆட்சி காலத்தில் அனேகமான தொழில் நிறுவனங்கள் விற்கப்பட்டன. நீங்களும் நாங்களும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்கள். ஜனவரி 8ஆம் திகதி வாக்களித்தோம், இந்த நாட்டிலே ஒரு ஆட்சிமாற்றம் வரவேண்டும் என்பதற்காக, கடந்த சர்வதிகார ஆட்சியை நாங்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக, நாங்கள் முயற்சியெடுத்தோம். இந்த நாட்டின் மைத்திரபால சிறிசேன, ரணில்விக்கிரமசிங்க அவர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கை காரணமாக எமது மக்கள் வாரிவாரி வழங்கிய வாக்கின் அடிப்படையில் நாங்கள் வெற்றிபெற்றோம். அந்த வெற்றியின்  ஆரம்ப கட்டத்திலே நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். மில்கோ நிறுவனம் 70 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரத்தை அளித்துக் கொண்டு இருக்கின்றது. எதிர்க்காலதிலே இந்த நிறுவனம் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற நிறுவனமான எதிகாலத்தில் மாற்றம் அடையும் என்பதனை என்னால் உறுதியளிக்க முடிகின்றது.
     எனக்கு முன்னர் பேசிய உங்களது பிரதிநிதி அவர்கள் பேசினார் உங்களுக்காக கறவைபசுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று சொன்னார் எமது அமைச்சர் ஹரிசன் 2000 கறவைப் பசுக்களைத் தந்துள்ளார் எதிர்காலத்தில் 3000 கறவை பசுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அன்புக்குரியவர்களெ நல்லதொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்வதொரு பிரதமர் ரணில்விக்கிரம சிங்க அவர்கள் இந்த நாட்டில் நல்லதொரு மாற்றத்தினைக் கொண்டுவர வேண்டும் என்று இருக்கின்றார்கள் நம்பிக்கையோடு இருங்கள் நம்பிக்கை அவசரமாக வெல்வது கிடையாது. மெதுமெதுவாக வெல்லும் படிப்படியாக கிடைக்கும் எங்களுடைய செய்திகள் உங்களுடைய வீட்டைவந்துதட்டும் நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும்.
     நாங்கள் நீங்கள் எல்லோருமாக ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை, இந்த ஆட்சியை நாங்கள் பாதுகாப்பதிலே உறுதி பூணவேண்டும்  கடந்த காலங்களைப் போன்று ஒன்றும்கிடைக்கவில்லை, ஒன்றும்நடக்கவில்லை என்று குறை கூறிக்கொண்டு இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. பொறுமையாக இருங்கள் ஒன்றொன்றாக உங்கள் வீடுதேடி வரும். கடந்த காலத்தில் பட்ட கஸ்ரத்தைவிட இன்று உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடக்கூடியதாக உள்ளது. நீங்கள் நிம்மதியாக தூங்குவதற்கு, வெள்ளை வேன் தொல்லையின்றி இருப்பதற்கு, உங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு, கணவன்மாரை பாதுகாப்பதற்கு அந்த சந்தர்ப்பத்தை எமது ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களுந்தான் இந்த சிறுபான்மை சமூகத்திற்கு  ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.
    எனவே எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் இந்த ஐக்கிய தேசியக்கட்சி தலமையிலான ஆட்சியை, ஜனாதிபதி தலைமையிலான இந்த அட்சியை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டுவரை யாரும் ஒரு மயிர் கூட பிடுங்கிவிட முடியாது, யாரும் ஆட்டிபார்க்கவும் முடியாது.
    நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் நாளைவிழும், நாளைவிழும் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். எங்களுடைய வீட்டில் சொல்லுவார்கள் மாட்டிற்கு பின்னால் போகின்ற நாய்க் கூட்டம் போல மாட்டிற்கு பின்னால் தொங்குவது விழுந்துவிடும், விழுந்துவிடும் என்று கற்பனையோடு நாய்கள் பின்னால் செல்வது போல சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள் அரசாங்கம் விழுந்துவிடும் விழுந்துவிடும் என்று சொல்லிகின்றார் 2020 ஆம் ஆண்டுவரை இந்த அரசாங்கம் எந்த கட்டத்திலும் ஆடாது அசையாது நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறிவிடைபெறுகின்றேன் என அவர் தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்