கல்முனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவு (ICU)இயங்கும்!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் (4) வெள்ளிக்கிழமை முதல் இதுவரைகாலமும் இல்லாத அதிதீவீர சிகிச்சைப்பிரிவு (ICU)இயங்க ஆரம்பித்துள்ளது. 
 
 அது எளிய முறையில் ஆரவாரமின்றி வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனினால் திறந்துவைக்கப்பட்டது..

 
 
200 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும் தேசியரீதியில்  அண்மைகாலமாக பல வளர்ச்சிப்படிகளை தன்னகத்தே கொண்டு தேசியரீதியான பல விருதுகளை பெற்றது மட்டுமின்றி இன மத மொழி பேதமின்றி சேவையில் ஓர் நிலையான இடத்தைப் பிடித்து வளர்ச்சிகள் கண்டுள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று இப்பிரிவு திறந்தவைக்கப்பட்டமை இப்பகுதிவாழ் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். 
 
 இங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவு இதுவரை இல்லாமல் இயங்கியது ஓர் பாரிய குறைபாடாக இருந்துவந்தது.  எனவே வைத்திய அத்தியட்சகர்  டாக்டர்  இரா முரளீஸ்வரன் அவர்களின் முயற்சியில் இக்குறைபாடு நீக்கப்பட்டுள்ளது . 
 
இதற்காக வைத்திய அத்தியட்சகர் பலரிடம் தனிப்பபட்ட வகையில் உதவிகள் கோரியே இதனை நிறைவுசெய்துள்ளார். இன்று முதல் இயங்கும் இப்பிரிவு பல மக்களின் உயிரைக் காக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
 பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  சா. இராஜேந்திரன் நெறிபப்டுத்தலில்  மயக்க மருந்து நிபுணர்   டாக்டர் தேவகுமார் அவர்களின் வழிநடத்தலில் இயங்க பொறுப்பு வைத்திய அதிகாரியாக  டாக்டர் உமாசங்கர் அவர்களும்  பொது வைத்திய நிபுணர்   டாக்டர் ரமேஸ் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் இப்பிரிவு உத்தியோகஸ்தர்களுடன் சிறப்பாக இயங்கவுள்ளது