பிரதமரின் பாராட்டை பெற்றனர் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவர்கள்

மட்டக்களப்பு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியால மாணவிகளின் உழவர் நடனத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தனது பாராட்டுக்ளை தெரவித்துள்ளார்..

பிரதமரின் 40 வது வருட அரசியல் சேவை பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அம்பேவல பாற் தொழிற்சாலையின் புதிய நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதமர் மற்றும் கிராமிய பொருளாதார அவித்தி அமைச்சர் பி.ஹரிசன், பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி, கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், அமைச்சர் பி.திகாம்பரம்,அமைச்சர் ரவிந்திர சமரவீர, நவின் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்

திறப்பு விழாவினை சிறப்பிக்கும் முகமாக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய மாணவிகளின் உழவர் நடனத்தினை இடம்பெறச் செய்யவேண்டுமென கிராமிய பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் கிழக்கு மாகாண மில்கோ நிறுவனத்தின் முகாமையாளர் கே. தேவராஜனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்டையில் திறப்பு விழாவின் போது இவ் உழவர்  நடனத்தை மாணவர்கள் நிகழ்த்தியிருந்தனர்.

இதனை பார்வையிட்ட பிரதமர் கைதட்டி தனது பாராட்டை வெளிப்படுத்தியதோடு. உரையாற்றும் போதும் தனது பாராட்டுக்களை தெரவித்திருந்தார்.தனது உரையில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்துவந்து சிறப்பான முறையில் உழவர் நடனத்தை வழங்கிய பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள், அதிபர், உட்பட கலந்து கொண்ட ஆசிரியகள், அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக தனது உரையில் தெரிவித்தார்  உரையாற்றி முடிந்ததும்  மாணவிகள் அனைவரையும் அழைத்து நேரடியாக நேரடியாக உரையாடி குழுப்படத்தினையும் எடுத்துக் கொண்டார்